Tamil Translation of “The Golden Bird” for IML Day Drive

By Rekha

All entries to our IML Day Drive are licensed under CC BY 3.0

தங்கப்பறவை

ஒரு அரசனின் அழகிய நந்தவனத்தில் ஒரு மரம் தங்க அரத்திப்பழங்கள் தாங்கி நின்றன.அந்த பழங்களின் எண்ணிக்கை நிதமும் கணக்கில் வைக்கப்பட்டு இருந்தது. அவை கனிந்து வரும் நேரம் , ஒரு இரவு ஒரு பழம் குறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இதை அறிந்து மிகுந்த கோபமுற்ற அரசன் தோட்டக்காரனை இரவு முழுவதும் மரத்தின் கீழ் காவலுக்கு நிற்கும்படி ஆணையிட்டார்.தோட்டக்காரன் தனது மூத்த மகனை  காவலுக்கு இருக்கும்படி செய்தான் அவனோ நள்ளிரவில் கண் அயர்ந்து தூங்கிவிட்டான். காலையில் மற்றொரு பழம் காணாமல் போயிருந்தது .மறுநாள் இரவு, தோட்டக்காரன் தன் இரண்டாவது மகனை காவலுக்கு இருக்கும்படி செய்தான் . அவனும் நள்ளிரவில் தூங்கி விடவே மற்றுமொரு பழம் காணாமல் போனது .தோட்டக்காரன் இறுதியாக அரை மனதோடு தனது இளைய மகனை காவலுக்கு இருக்கும்படி செய்தான்.

நள்ளிரவில் காற்றில் இலை அசையும் ஓசை கேட்டு எழுந்தான் அவன்.அப்பொழுது  ஒரு அழகிய தங்கப்பறவை அந்த மரத்தின் கிளையில் பறந்து வந்து அமர்ந்து அதன் அலகால் ஒரு பழத்தை கொய்தது.உடனே அந்த தோட்டக்காரனின் மைந்தன் ஒரு அம்பு அந்த தங்கப்பறவையை நோக்கி எய்தான் .ஆனால்,அந்த தங்கப்பறவை எந்த காயமும் இன்றி அங்கிருந்து ஒரு தங்கச்சிறகை உதிர்த்து அங்கிருந்து பறந்தது. காலையில், அந்த தங்கச்சிறகு அரசவைக்கு கொண்டு வரப் பட் டது .அதன் மதிப்பு ராஜ்யத்தின் மொத்த மதிப்பைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்தது என்று தெரிய வந்தது. இருந்தும் அந்த அரசனோ தனக்கு அந்த பறவையே வேண்டும் என்று ஆணையிட்டான் .பிறகு அந்த தோட்டக்காரனின் மூத்த மகன் அந்த பறவையைக் கண்டு பிடிப்பது எளிது என்று கருதி காட்டிற்கு புறப்பட்டான்.

அந்த காட்டில் ஒரு நரி உட்கார்ந்து இருப்பதைக் கண்டான்.உடனே தனது வில்லை எடுத்து அம்பு எய்த முற்பட்டான்.அந்த நரியோ , “என்னை விட்டுவிடு , நீ எதற்காக இங்கு வந்தாய் என்பது எனக்கு தெரியும்.நான் சொல்வதை கேட்டால் நீ வந்த வேலை எளிதில் முடியும் , என்னை நம்பு .நீ செல்லும் வழியில் ஒரு கிராமம் வரும் அங்கே இரு குடில்களைக் காண்பாய் அதில் ஒன்று மிக அழகாக ரம்யமாக இருக்கும் அதனுள் செல்லாதே , மற்றொன்றோ பாழ் அடைந்த நிலையில் இருக்கும் அதில் இந்த இரவைக் கழித்து விட்டு செல் .” என்றது. ஆனால், அந்த தோட்டக்காரனின் முதல் மகனோ இந்த மிருகத்திற்கு எப்படி இத்தனை விஷயமும் தெரிய போகிறது, என்று எண்ணி தன் வில்லால் அம்பு தொடுத்தான் .அனால் குறி தவறியது.அந்த நரியோ தன் வாலை மேலே தூக்கி காட்டிற்குள் பதுங்கி ஓடியது.

அந்த நரி கூறியது போல் , காட்டில் ஒரு கிராமமும் அதில் இரு குடிலும் இருந்தது. அதில் அழகான ஒரு குடிலில் மக்கள் அனைவரும் ஆடல் பாடல் என கேளிக்கையில் மகிழ்ந்து உணவு அருந்துவதைக் கண்டு அந்த தோட்டக்காரனின் மகன் உள்ளே சென்று தன்னையும், நரியின் வார்த்தையையும், அரசகட்டளையையும் மறந்தான்.அவன் வீட்டிற்கு திரும்பவே இல்லை.

பிறகு, தோட்டக்காரன் தன் இரண்டாவது மகனை அந்த தங்கப்பரவையை தேடி வருமாறு அனுப்பினான்.அந்த நரியை அவனும் கண்டான் ,அந்த நரியின் சொற்படி நடக்கவே முனைந்தான். ஆனால், அந்த கிராமத்தை அடையும் போது, அவனுடைய அண்ணன் அழகிய குடிலின் வாயிலில் இருந்து அழைப்பதை தவிர்க்க முடியாமல் உள்ளே சென்றான்.அவனும் அரசகட்டளையை மறந்தான்.

காலம் சென்றது ,ஆனால் தன் முதல் இரு மகன்களும் திரும்பவே இல்லை .இப்பொழுது மூன்றாவது மகனுக்கு அந்த தங்கப்பறவையை கைப்பற்ற வேண்டும் என்ற பேரவா எழுந்தது.ஆனால், தோட்டகாரனுக்கோ தன் மூன்றாவது மகனையும் இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் வெகு நாள் மறுப்பிற்கு பிறகு சம்மதித்தார்.

மூன்றாவது மகனும் அந்த நரியை கண்டான்.அதன் சொல்லை கேட்டு நன்றியுடன் அங்கிருந்து செல்ல முற்பட்டான்.அந்த நரியும் ,” நீ என் வாலில் உட்கார் நான் உன்னை விரைவாக அழைத்து செல்கிறேன்” என்று தன் வாலை  நீட்டியது.அவனும் அதில் அமர்ந்து மின்னலென  கிராமத்தை அடைந்தான். அங்கே இரவை பாழ்  அடைந்த குடிலில் கழித்தான்.

காலையில், அவன் அந்த கிராமத்தை விட்டு செல்ல முற்படும்போது , நரி மீண்டும் அவனை சந்தித்து  உபதேசித்தது .”நீ போகும்வழியில் ஒரு கோட்டையை சென்றடைவாய் அங்கே காவலாளியர் கூட்டம் ,கடமை மறந்து உறங்கி கொண்டு இருப்பார்கள் .அவர்களை பாராமல் கோட்டைக்குள் செல்வாய் , அங்கே ஒரு  மரத்தாலான கூண்டில் அந்த தங்கப்பறவையைக்  காண்பாய்.மறந்தும் அந்த பறவையை அருகே இருக்கும் தங்கக்கூண்டில் மாற்றி எடுத்து வர எண்ணாதே ,
இல்லையேல் வருத்தப்படுவாய் ” என்றது.தன் வாலை நீட்டவே அவன் அந்த கோட்டையை விரைவாக அடைந்தான். நரி சொன்னது போல் , காவலர்களை பொருட்படுத்தாது உள்ளே சென்றான் அந்த அழகிய தங்க பறவையை பார்த்து அதிசயித்தான் .அதன் அருகே காணாமல் போன மூன்று பழங்களும் இருந்தன. அதே வேளையில் , நரியின் சொல்லை மறந்து அந்த பறவையை தங்க கூண்டில் எடுத்து வர முற்பட்டான்.அப்போது அந்த தங்க பறவை பெரும் ஒலியை எழுப்பி அந்த அரண்மனையின் அனைத்து  காவலரையும் எழுப்பியது.அவன் அரசன் முன் கொண்டு நிறுத்தப்பட்டான்.அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது .அவன் காற்றை விட விரைந்து செல்லும் தங்க குதிரையை கொண்டு வந்து தந்தால், அவன் உயிர் பிழைத்து செல்லலாம் என்று அரசன் ஆணையிட்டான்.மேலும் அந்த தங்க பறவையையும் கொண்டு செல்லலாம் என்று அரசன் அறிவித்தான்.

மிகுந்த மன உளைச்சலுக்கு பிறகு அவன் அந்த தங்க குதிரையை தேட முற்பட்டான் .அப்பொழுது அவன் சற்றும் எதிர்பாராமல் அந்த நரியைக்  கண்டான்.அந்த நரி அவன் செய்த பிழையை பொருத்து மீண்டும் அவன் பயணத்தை தொடர அவனுக்கு உபதேசம் செய்தது.”நீ நேரே செல் அந்த தங்க குதிரையின் லாயத்தை காண்பாய் அந்த குதிரையின் அருகே ஒரு மணமகன் அந்த குதிரையின் தங்க சேணத்தின் மேல் கை வைத்து தூங்கிக்  கொண்டிருப்பான்.மறந்தும் அந்த குதிரைக்கு தங்க சேணத்தை போர்த்தாதே இல்லையேல் வருந்துவாய் ” , என்று தன் வாலை நீட்டியது .அவன் அந்த நரியின் மேல் ஏறி மின்னலென குதிரை லாயத்தை அடைந்தான்.அப்போதும் அவன் நரியின் சொல்லை மறந்து .தங்க குதிரைக்கு தங்க சேணமே பொருந்தும்.தோல் சேணம் பொருந்தாது என்று எண்ணி அந்த தங்க சேணத்தை எடுக்க முற்பட்டான்.அப்போது தூக்கம் கலைந்த அந்த மணமகன் சத்தம் போட்டு காவலாளிகளை அழைத்து அவனை சிறை பிடித்து அரசன் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.அவன் இம்முறை அரசகுமாரியை கொண்டு வந்தால் , அவன் அந்த குதிரையையும் , பறவையையும் கொண்டு உயிர் பிழைத்து செல்லலாம் என்று அரசன் ஆணையிட்டான்.

மீண்டும் அந்த நரியை எதிர்பாராமல் சந்தித்தான் அந்த நரியும் மீண்டும் அவன் பிழை பொருத்து அவனுக்கு உபதேசம் செய்தது. “நீ நேரே செல் அந்த அரண்மனையை மாலையில் அடைவாய் , அப்போது நீ காத்திருந்து அந்த அழகிய அரசகுமாரி அந்தப்புரத்தில் நள்ளிரவு குளிப்பதற்கு செல்வாள் .அப்போது நீ அவளை முத்தமிட்டால் அவள் உன்னுடன் வர சம்மதிப்பாள். ஆனால் அவளை தன் அம்மா அப்பாவை கண்டு பிரியாவிடை கொடுக்க சம்மதிக்காதே இல்லையேல் நீ வருந்துவாய் “என்று தன் வாலை நீட்டியது.மின்னலென அந்த அரண்மனையை அடைந்த அந்த தோட்டக்காரனின் மூன்றாவது மகன் நரி சொன்னது போல் நள்ளிரவு வரை காத்திருந்து அந்த அழகிய அரசகுமாரியை முத்தமிட்டான்.அவள் அவனுடன் ஓடி வர சம்மதித்தாள் ஆனால் தன் தந்தை தாயிடம் விடை பெற்ற பிறகே அங்கிருந்து வர முடியும் என்று கெஞ்சி அழுதாள்.அதனால் மனமிரங்கி அந்த நரியின் சொல்லை மறந்து அனுமதி அளித்தான்.தன் தந்தையை காண முற்படும்போது தூக்கம் கலைந்த அரசனிடம் பிடிபட்டான் அவன்.

இம்முறை அரண்மனையின் ஜன்னலின் அழகிய இயற்கை காட்சியை மறைக்கும் பெரிய மலையை எட்டு நாட்களுக்குள் கொடைந்தால் , தங்க பறவை , குதிரை மற்றும் அரசகுமாரி அனைத்தையுமே தனக்கு சொந்தமாக்கி கொள்ளலாம் என்றான் அரசன்.இதை அறிந்த நரி , “நீ கவலை படாதே நாளை காலை இந்த மலை இங்கிருக்காது அதை நான் பார்த்து கொள்கிறேன்.நீ போய் தூங்கு.”என்றது. அவனும் நரி கூறியது போல் செய்தான் அந்த மலையும் காலையில் மறைந்தது. “ஆஹா!, நாம் இப்போது இந்த மூன்றையும் அடைந்து விடலாம் ” ,என்று ஆனந்தம் அடைந்தான். “இப்போதுதான் நாம் மிக கவனமாக செயல்பட வேண்டும் என்றது அந்த நரி.” அந்த அரசன் உன்னிடம் தன் மகள் தனக்கு வேண்டும் என்று சொன்னால்கூட நீ மறுப்பு கூறாமல் ஒப்புக்கொண்டு அவளிடம் விடை பெருவதாககக் கூறி அவளை குதிரை மேல் ஏற்றிகொள்.அங்கிருந்து விரைந்து செல்.” அரசகுமரியுடன் நான் நிற்கிறேன் , நீ அரசனிடம் சென்று அந்த தங்க பறவையை பெற்று கொண்டு வா என்றது அந்த நரி. அப்போது, அந்த அரசன் முதலில் தகுதியான குதிரை தான் நீ கொண்டு வந்தாயா என்று  சோதித்து பார்க்க தன் கையில் தங்க பறவையை வைத்து கொண்டு காத்திருப்பான் . நீ அப்போது அந்த  தங்க பறவை தானா என்று நான் சோதிக்க வேண்டும் என்று கூறி அந்த தங்க பறவையையும்  கவர்ந்து வந்துவிடவேண்டும். “என்றது அந்த நரி.

அந்த நரி கூறியது போல் கேட்ட அவன் அரசகுமாரியுடன் தங்க பறவையை அந்த தங்க குதிரையில் கவர்ந்து வந்தான்.இப்போது அந்த நரி ,”நான் உன்னை வேண்டி கேட்கிறேன் என்னை கொன்றுவிடு  “என்று சொன்னது .ஆனால் அவனோ நன்றியுடன் விடை பெற்று செல்ல முற்பட அந்த நரி “நீ செல்லும்போது எந்த நதி கரையிலும் இளைப்பாற வேண்டாம் ,  வேறு யாரையும் குதிரையில் ஏற்றதே , இல்லையேல் வருந்துவாய்”, என்றது . அப்படி செல்வது மிக எளிது என்று எண்ணிய அவன் மறுபடியும் அவன் முதலில் இளைப்பாறிய கிராமத்தை வந்தடைந்தான்.அங்கே கிராம மக்கள் இரு கள்வர்களை தூக்கிலிட முற்பட்டபோது ,அவர்களை காப்பாற்ற எண்ணினான் . அவர்கள் அவனுடைய இரு சகோதரர்கள் என்று உணர்ந்தான். அவர்கள் களவாடி சென்ற அனைத்து செல்வங்களையும் திருப்பி அளிக்கும்போது மட்டுமே அவர்களை விடுவிக்க முடியும் என்று கூறினார்.அதே போல் செய்தனர்.உயிர் பிழைத்த சகோதரர்களோ தங்களது தம்பியை ஆற்றங்கரை அழகாக உள்ளது இங்கே இளைபாரலாம் என்று சொல்லி அவனை அவன் வென்று வந்த குதிரை , பறவை அரசகுமாரி அனைத்தையும் மறக்க வைத்து அவனை ஆற்றில் மூழ்க விட்டு கொல்ல பார்த்தனர்.

அப்போது அங்கே வந்த நரி அந்த தோட்டக்காரனின் இளைய மகனை தன வாலை நீட்டி காப்பாற்றியது. ஊருக்குள் அவனை தேடி அவன் சகோதரர்கள் ஆட்கள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் , அவன் வென்று வந்த தங்க பறவை தங்க குதிரை மற்று அரசகுமாரி அனைத்தையும் தாங்கள் வென்றதாகக் கூறி குதூகலத்தில் ஆழ்ந்திருப்பதாக கூறியது.இதை கேட்டு அவன் ஆச்சர்ய முற்றான் . அப்போதும் அந்த நரி , “நான் உன்னை வேண்டி கேட்கிறேன் என் தலையை , கையை , கால்களை வெட்டு” என்றது.அவனும் அவ்வாறே செய்தான் அப்போது அந்த நரி அந்த அரசகுமாரியின் சகோதரனாக மாறியது.அவர்கள் இருவரும் மாறு வேடமுற்று அரசனிடம் சென்று முறையிட்டனர் .அரசரும் அத்தனை நாட்களாக உண்ணாமல் இருந்த பறவை , குதிரை மற்றும் அரசகுமாரி  உணவு உட்கொள்வதாக சேதி கேட்டவுடன் இது தோட்டக்காரனின் இளைய   மகனின் உழைப்பினால் கிடைக்கபெற்ற செல்வம் என்பதனை உணர்ந்தான். அந்த அரசனின் ஆட்சியுரிமை அரசரின் மறைவிற்குப்பின் அந்த தோட்டக்காரனின் இளையமகனுக்கே வழங்கப்பட்டது.

சுபம்

2 thoughts on “Tamil Translation of “The Golden Bird” for IML Day Drive”

Leave a Reply