Rating:
5
தமிழ்த்தருவின் கவிக்கனிகள்

தமிழ்த்தருவின் கவிக்கனிகள்

by அருண் பிரகாஷ் (1 review, add another)
Type: Print Book
Genre: Poetry
Language: Tamil
Price: Rs.180.00 + shipping
This book ships within India only.
Preview
Price: Rs.180.00 + shipping

Processed in 3-5 business days. Shipping Time Extra
Description of "தமிழ்த்தருவின் கவிக்கனிகள்"

தமிழ் மீது கொள்ளை ஆசையும் மயக்கமும் கொண்ட உள்ளங்களுக்கு, கண்ணுக்கினிய விருந்தாகும் இக்கவிதைத் தொகுப்பு. மனித உணர்வுகளான உவகை, சோகம், வலி, காதல், நட்பு, சமூக மற்றும் சுற்றுச்சூழல் உணர்வு, இயற்கை ரசனை ஆகியவையோடு இதயம் ஒரு எதார்த்தமான தேடலில் மூழ்கிடும். நம்மை இப்புவிக்கு அழைத்து வரும் தாய்க்கு சமர்ப்பணமாக எழுதப்பட்ட கவிதை 'ஆசைமிகு அம்மாவுக்கு', இந்தத் 'தமிழ்த்தருவின் கவிக்கனிகள்' தொகுப்பின் முதற்கனி; முக்கியக்கனி. தமிழினத்தின் வீரத்தையும் தன்மானத்தையும் காத்திட நடந்தேறிய அறப்போருக்காகவும், இளைஞர்களுக்காகவும் வார்க்கப்பட்ட 'மெய்ப்போர்' என்ற கவிதை, இத்தொகுப்பின் இறுதிக்கனியாகும்.

About the author(s)

கவிஞன் பெயர் அருண். இவ்வுலகில் வறுமைத் தொட்டுத் தடவி வளரும் பிள்ளைகளின் இன்னல்களையும் இல்லாமையையும் நன்கு அறிந்த ஒருவன். உழைப்பையும் ஒழுக்கத்தையும் மட்டுமே நம்பி வாழ்வின் ஒவ்வொரு தடையையும் தாண்டி வருபவன். பாடம் முடிக்கவும், மதிப்பெண் எடுப்பதற்காகவும், கல்வி கற்கும் வயதில் கற்றிடாதவன்; தமிழினை உயிருள்ள, சுவாசமுள்ள ஓர் மொழியாகவே போற்றி, பழகி, தொழுது, வாழ்ந்து வருபவன். மிகுந்த ஈர்ப்பும் ஆசையும் காதலும் மதிப்பும் தன் தமிழ் மீது கொண்ட ஒருவன். பல ஆண்டுகாலமாக கையில் எழுதுகோலோடு அலையும் மொழிப்பித்தன் (சுமார் பத்து ஆண்டுகள்). ஐந்நூறுக்கும் மேற்பட்ட கவிதைகளும், பல கதைகளும், பல்வேறு வாழ்வியல் கட்டுரைகளும் எழுத்துப்படைப்புகளுள் அடங்கும். அதில், சமீப காலத்தில் எழுதப்பட்ட கவிதைகளில், பொருக்கி எடுக்கப்பட்ட சிலவற்றை ஒரு தொகுப்பாக்கி வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவே இந்தப் புத்தகம், 'தமிழ்த்தருவின் கவிக்கனிகள்'. உலகம் வாசித்து மகிழ, படைப்புகள் பல இன்னும் காத்திருக்கின்றன.

Book Details
Number of Pages: 
122
Dimensions: 
5 inch x 8 inch
Interior Pages: Black & White
Binding: Paperback (Perfect Binding)
Availability: In Stock (Print on Demand)
Other Books in Poetry
स्वस्तिकामृत -  SWASTIKAMRUT
स्वस्तिकामृत - SWASTIKAMRUT
by हेमंतकुमार गजानन पाध्या.
शबनम  की  बूँदें
शबनम की बूँदें
by कवि प्रमोद
Reviews of "தமிழ்த்தருவின் கவிக்கனிகள்"
Write another review

இதயச்சதுக்கத்தின் நடுக்கத்தில் தமிழ் வடிந்திடும் அனைத்து கவிகளிலும். மனம் என்ற ஒன்றை வரிகளின் வடிவினில் காண உதவி செய்யும் ஒவ்வொரு கவிதையும். மனதை சற்றே திறந்து வாசிக்க, இந்தப் புத்தகத்தோடு ஒரு சிறிய வாழ்க்கைப் பயணம் சென்று வரும். தமிழ் விரும்பிகளுக்கு இப்புத்தகம் நிச்சயம் நல்ல அனுபவமாக அமையும்.

Payment Options

Payment options available are Credit Card, Indian Debit Card, Indian Internet Banking, Electronic Transfer to Bank Account, Check/Demand Draft. The details are available here.