Rating:
0
எழு பெரு வள்ளல்கள் ( Ezhu Peru Vallalgal ) (eBook)

எழு பெரு வள்ளல்கள் ( Ezhu Peru Vallalgal ) (eBook)

by கி. வா. ஜகந்நாதன் (write a review)
Type: e-book
Genre: History, Literature & Fiction
Language: Tamil
Price: Rs.50.00
Available Formats: PDF Immediate Download on Full Payment
Preview
Description of "எழு பெரு வள்ளல்கள் ( Ezhu Peru Vallalgal ) (eBook)"

ஏழு என்ற கணக்கைக் கொண்ட பொருள்கள் பலவற்றைப் பற்றி நாம் கேள்விப் படுகிறோம். கீழ் உலகம் ஏழு, மேல் உலகம் ஏழு என்று ஒரு கணக்கு உண்டு. ஏழு முனிவர்கள் என்று சேர்த்துச் சொல்வது ஒரு வழக்கம். ஏழு தீவுகள் என்பது ஒரு வகையான கணக்கு. ஏழு சுரங்கள் சங்கீத உலகத்துக் கணக்கு. வாரத்தில் ஏழு நாட்கள் உண்டு என்பதை உலகில் உள்ள எல்லோருமே அறிவார்கள்.

தமிழ் இலக்கியங்களைப் படித்தவர்களுக்கு ஏழு வள்ளல்கள் என்றால் நன்றாகத் தெரியும், அவர்கள் மிகப் பழைய காலத்தில் வாழ்ந்தவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வோரிடத்தில் வாழ்ந்தவர். அவர்களிடம் வேறு நல்ல குணங்கள் பல இருந்தாலும், பிறருக்குப் பொருளை அளித்து இன்புறும் பண்பிலே அவர்கள் சிறந்திருந்தார்கள். தம்மை அணுகினவர்களுக்கு வேண்டியதைக் குறிப்பறிந்து மனம் உவந்து வழங்குபவர்களை வள்ளல் என்று கூறுவார்கள். அவர்கள் தடை சிறிதும் இல்லாமல் கொடுப்பதனால் பொருளைப் பெறுகிறவர்கள் இன்பம் அடைந்தார்கள்; கொடுத்த வள்ளல்களும் கொடுப்பதனால் இன்பத்தை அடைந் தார்கள். ஒரு நாள் யாருக்கும் எதுவும் கொடுக்க முடியாதபடி நேர்ந்துவிட்டால் அன்று அவர்களுக்கு உள்ளமும் உடம்பும் வாடும் ஏதோ நோய் வந்தவர் களைப் போல இருப்பார்கள்.

About the author(s)

கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்[1]. இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்[2]. 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது[3]. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.

Book Details
Availability: Available for Download (e-book)
Other Books in History, Literature & Fiction
भोर
भोर
by गंगेश गुंजन
THE SEVEN SHADES
THE SEVEN SHADES
by RAVI RANJAN GOSWAMI
Melting Everest & Falling Mountains
Melting Everest & Falling Mountains
by Hari Prasad Shrestha
SUMERIAN SCRIPTURES VOLUME 2
SUMERIAN SCRIPTURES VOLUME 2
by Axum Publications
Reviews of "எழு பெரு வள்ளல்கள் ( Ezhu Peru Vallalgal ) (eBook)"
No Reviews Yet! Write the first one!

Payment Options

Payment options available are Credit Card, Indian Debit Card, Indian Internet Banking, Electronic Transfer to Bank Account, Check/Demand Draft. The details are available here.