Rating:
4.75
தட்பம் தவிர் (eBook)

தட்பம் தவிர் (eBook)

Show no mercy

by Aravindh Sachidanandam (4 reviews, add another)
Type: e-book
Genre: Mystery & Crime
Language: Tamil
Price: Rs.50.00
Available Formats: PDF Immediate Download on Full Payment
Preview
Description of "தட்பம் தவிர் (eBook)"

சென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு துப்பு கொடுத்துவிட்டு செல்ல, முதல் கொலை நடந்த கல்லூரியில், மாணவனொருவன் தற்கொலைக்கு முயல்கிறான். அவன்தான் முதல் கொலையின் விட்னெஸ். கல்லூரி நிர்வாகத்தால், தான் மனரீதியான சித்ரவதைக்கு ஆளானதால் தற்கொலைக்கு முயன்றதாக மாணவன் சொல்ல, இன்ஸ்பெக்டருக்கு உண்மைகள் புரியத் தொடங்குகின்றன. கல்லூரியில் ரகசிய விசாரணை மேற்கொள்கிறார். பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் எந்த அளவிற்கு கொடுமை படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்து திடுக்கிடுகிறார். விசாரணையில், கல்லூரியின் முன்னாள் மாணவன்தான் கொலைகாரன் என்று தெரியவருகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட அவனை கைது செய்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் கொலைகள் தொடர்கின்றன. பின் ஏராளமான திருப்பங்கள் நிகழ்கின்றன. உண்மையான கொலைகாரன் யார்? தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்களா? மிகப்பெரிய மனோதத்துவ விளையாட்டில் சிக்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பிழைப்பாரா?

About the author(s)

இவர் மெட்ராஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்று, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். இன்று முழு நேர எழுத்தாளராக, திரைக்கதை ஆசிரியராக இயங்கிக் கொண்டிருக்கிறார். இவரது கதைகளும் கட்டுரைகளும், பல்வேறு இதழ்களிலும், தளங்களிலும் வெளியாகி வருகின்றன.
“மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்” என்ற மொழிபெயர்ப்பு நூல் கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. உயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளை வழங்கும் சுஜாதா விருது அண்மையில் இவரது இணையதளத்திற்கு கிட்டியுள்ளது.
இவரது இணையதளம்
http://aravindhskumar.com/

Book Details
Publisher: 
SparkCrews Publications
Availability: Available for Download (e-book)
Other Books in Mystery & Crime
Run to Survive
Run to Survive
by Dr Anindya Dasgupta
Reviews of "தட்பம் தவிர் (eBook)"
Write another review

Comments

Re: தட்பம் தவிர் (e-book) by anand.p.hosur
4 September 2014 - 1:13pm

சமீபத்தில் ரசித்துப் படித்த ஒரு நாவல் 'தட்பம் தவிர்' அரவிந்த்-ன் முதல் க்ரைம் நாவல். ஒருவர் எழுதும் முதல் நாவல் என்று சொல்ல முடியாத அளவிற்கு எழுதப்பட்டிருக்கிறது!! வழக்கமான ஒரு க்ரைம் நாவலாக இல்லாமல் கொஞ்சம் புதுமையாய் மனோதத்துவத்தை தொட்டு, சில கல்லூரிகளில் நடக்கும் மறைமுக அடிமைத்தனத்தை கதையின் போக்கில் ஓரமாய் விளக்கி, தேவையான இடங்களில் சில தமிழ் பாடல்களை உபயோகப்படுத்தி, எனினும் விறுவிறுப்பு குறையாமல், திருப்பங்களுக்கு பஞ்சமில்லாமல் எழுதியிருப்பது வியக்க வைக்கிறது. கதை சொல்லத் தெரிந்தவராக மட்டும் இல்லாமல் புதிதான களத்தை எடுத்து, திறம்பட சொல்லத் தெரிந்தவராக இருக்கிறார் அரவிந்த். சித்தர் பாடல்களைப் பயன்படுத்தி இருப்பது அவரின் தமிழ் ஆர்வத்தை மட்டுமின்றி, அவரின் வாசிப்பு எல்லையையும் காட்டுகிறது. இந்த படைப்பிற்கும் இனி எழுதும் படைப்புகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் ஆழ்ந்த, மிகச்சிறந்த படைப்புகளை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்.

Re: தட்பம் தவிர் (e-book) by johnnyhere89
4 August 2014 - 11:49am

தட்பம் தவிர்:
காலேஜ் கல்ச்சுரல்சில் நடக்கும் கொலையில் தொடங்குகிறது இந்நாவல்..கதையினூடே பொறியியல் கல்லூரிகளின் அடக்குமுறைகளை தோலுரித்து காட்டும் இடங்களும்,ஆங்காங்கே தோன்றும் சித்தர் பாடல்களும் அருமை.,எந்த வித logical loop holes இல்லாத அட்டகாசமான contemporary க்ரைம் நாவல்..

தட்பம் தவிர் (e-book) by arun.mahadevan
3 August 2014 - 2:19am

அருமையான படைப்பு! முதல் அத்தியாயம் தொடங்கி இறுதி வரை சற்றும் விருவிருப்பு குறையாமல் நம்மை கதையோடு ஒன்றி பயணிக்க வைத்துலார் ஆசிரியர். யதார்த்தமான எழுத்து நடை, தொடர் திருப்புமுனைகள், இருதி வரை தொடரும் சஸ்பன்ஸ் என கலக்கியிருக்கிறார்.

கதையில் பொறியியல் கல்லூரி பற்றிய நிகழ்வுகள் என்னை ஆறு ஆண்டுகல் பின்னோக்கி இழுத்து சென்று மீண்டும் என் கல்லூரி வாழ்க்கையை ஒரு முறை வாழவைத்தது. குறிப்பாக பொறியியல் கல்லூரிகளின் வெளியே தெரியாத நிதர்சனங்களை (அவலங்கலை) எடுத்துக் கூறியதர்காகவே ஒரு ஸ்பெஷள் சல்யூட்.

'Mind Games'ஐ அடிப்படையாக வைத்து நகரும் கதை என்பதால் விறுவிறுப்பிர்க்கோ, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்பிர்க்கோ, சுவாரஸ்யமான திருப்புமுனைகளுக்கோ பஞ்சமில்லை. ஆங்காங்கே சித்தர் பாடல்கள், மெடிடேஷ்ன் போன்ற ஆண்மீக டச் அற்புதம்.

இன்னும் பல‌ படைப்புகள் படைத்திட வாழ்த்துக்கள்!!

I thoroughly enjoyed reading it. Expecting more novels from you! All the best!!

Re: தட்பம் தவிர் (e-book) by gundothari
31 July 2014 - 9:55pm

நல்லதொரு படைப்பு.கிரைம் நாவலுக்கே உரித்தான விறுவிறுப்பும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்துள்ளன.அதிலும் , அந்த பிளாஷ்பேக் போல் இதுவரை தமிழ் எழுத்துலகில் வந்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.வந்திருந்தாலும் , பெமினைன் மேல்-மாஸ்குலைன் பீமேல் கான்செப்டை எல்லாம் மிக மிக அரிதாக , அதிலும் மிக லேசாகத் தான் தொட்டிருப்பார்கள்.அறிவுக்கு நல்ல தீனி ! நாவல் முழுதும் மனோதத்துவ அடிப்படையிலேயே நகர்கிறது.புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
வளர வேண்டிய துறைகளில் தலையாயது இந்த மனோதத்துவம் எனும் துறை."Stress Management" பற்றி ஓயாமல் பேசும் வாய்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் இந்த காலகட்டத்தில் , சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை எளிமையாகக் கொண்டு வர தெளிவான சிந்தனையைப் பேசும் இது போன்ற மனோதத்துவ கதைகளால் முடியும். மென்மேலும் வளர வேண்டும் ! வாழ்த்துக்கள் !
-மீனாட்சி சுந்தரி

Payment Options

Payment options available are Credit Card, Indian Debit Card, Indian Internet Banking, Electronic Transfer to Bank Account, Check/Demand Draft. The details are available here.