You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
Also Available As
₹ 49
₹ 49
பல கோடி ஆண்டுகளுக்கு முன், அகோரா மற்றும் பூலோகா என்ற இரு வகையான வேற்று கிரக உயிரினங்கள் தங்களது கிரகத்தில் இருந்து பூமியை வந்தடைந்தன. அவைகள் ஒன்றாக இணைந்து பூமியைப் பண்படுத்தி, தங்களது இனங்களைப் பெருக்கி ஓர் ராஜ்ஜியத்தை நிறுவினர்.
புது புது உயிரினங்களை உருவாக்கி, அவற்றினை பூமியில் உலவ விடுவது அவைகளின் முக்கிய பொழுதுப் போக்காக இருந்தது. அப்படி அவற்றின் ஒன்றாக இணைத்து, புதிதாக ஓர் உயிரினத்தைப் படைத்தனர்.
அவர்கள்தான் மனிதர்கள் .
அகோராக்கள் மனிதர்களை தங்களது உணவுக்காகவும் ,அடிமை வேலை செய்யவும் பயன்படுத்தினர் . ஆனால். பூலோகாக்கள், மனிதர்களை தங்களது நண்பர்களாகவும், தான் உருவாக்கிய குழந்தைகளாகவும் எண்ணியது. இதனால் இரு இனத்திற்கும் இடையே ஓர் பிரிவினை வந்தது
அதன் விளைவாக, அகோராக்களைப் பகைத்துக் கொண்டு, பூலோகா இனம் மொத்தமும் , அனைத்து மனிதர்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, பூமியின் மற்றோர் எல்லைக்கு சென்றனர் . அங்கு, பூலோகாக்கள் மனிதர்களுக்கு கட்டடவியல் , வானவியல் , கணிதவியல் என அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடுத்து மனிதர்களுக்கு அறிவூட்டினர். ,மனிதர்களும் அவர்களைத் தங்களது கடவுளாக வழிபட்டனர்.
இனிதான் பிரச்சனை ஆரம்பமானது.
அது, சில நாட்களில் பூமிக்கு ஓர் பேரழிவு வரப்போவதை பூலோகாக்கள் உணர்ந்தனர். அவ்வழிவினை தடுக்கவும், தங்களது கடவுள் ஆராதேவியின் கோபத்தை சாந்தப் படுத்தவும் ஓர் கோவிலை எழுப்ப முடிவெடுத்தனர். அதனால் பூலோகாக்கள் மனிதர்களோடு ஒன்றிணைந்து ஓர்...
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book அகோரன்.