You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
மனித வாழ்க்கையில் குற்றங்களுக்கு பஞ்சமில்லை. இது ஒரு வகையில் ஆதாம் - ஏவாள் காலத்திலிருந்து நடப்பதுவே. கலியுகத்தில் இன்னும் சகஜமாகவே, பல மட்டங்களில்.
நம்மில் யாரும் குற்றம் புரியாதவர்கள் இல்லை. சிலர் மாட்டிக் கொண்டுள்ளார்கள் பலர் மாட்டிக் கொள்ளவில்லை என்று சொல்லிவிடலாம்.
சட்டத்தை மீறுவதுதான் குற்றமா என்றால் மிகக் குறைவான குற்றங்கள் மட்டுமே பதிவாகின்றன. தர்மத்திற்கு, மனசாட்சிக்கு மாறாக நடப்பது எந்த வகையில் சேரும்? அதுவும் குற்றம் என்றுதானே சொல்ல வேண்டும்? அப்போ அதற்கெல்லாம் தண்டனை? பரிகாரம்? யோசிக்கலாம்!
வேலை ஓய்வுக்குப் பிறகு தினம் ஒரு கதை பதிவிடலாம் என ஏற்பட்ட வைராக்கியத்தில் 1200 கதைகள் எழுதித் தள்ளியாகிற்று. ஒருநாள் போட்ட கதை போல் அடுத்த நாள் இருக்கக் கூடாது என்று ஓர் குறிக்கோள். படிப்பவர்களும் இன்னைக்கு என்ன கதையோ என ஓர் எதிர்பார்ப்பு மேலிட வேண்டும் என்ற ஆசை.இப்படி எழுத முற்பட்டதில் எல்லா ஜானரிலும் எழுதப் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன் எனலாம். அப்படி தோன்றிய கிரைம் சார்ந்த கதைகளின் தொகுப்பு இப்போது உங்கள் கையில். இதுவே 100 ஆகிவிட்டது என்பது தொகுத்துப் பார்த்ததும் தெரிந்தது.
இதில் வரும் கதைகளில் பலவிதமான குற்றங்கள் பேசப் படுகின்றன. எல்லாவற்றிலும் தண்டனை கிடைத்ததா, சட்டம் தன் கடமையை ஆற்றியதா இல்லையா என்று பார்த்துக் கொள்ளலாம். பல குற்றங்களுக்கு காரணம், அது நடக்கக் கிடைத்த உந்துதல், பின்புலம் எல்லாம் நம்மில் பலருக்கு அவற்றை நியாயப் படுத்திடலாம் என்றே எண்ண வைக்கும் வகை.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book குற்றம் நடந்தது என்ன?.